விருச்சிகம் ராசி அன்பர்களே ,

இன்று மிகவும் நேர்மையுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். பொது இடங்களில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். யாரிடமும் அதிகம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணம் கண்டிப்பாக வந்து சேரும். வியாபார நோக்கத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பண செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.

இன்று உடல் ஆரோக்கியம் சீராகும். சகோதரர்களிடம் இருந்து வந்த மன வருத்தம் விலகும். எதிர்பாராத செலவுகள் ஒரு பக்கம் இருக்கக்கூடும். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை. அடுத்தவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் போது கவனமாக இருங்கள். யாரையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டாம். தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இரவு நேர பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் உள்ளது.

இன்று பெண்கள் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் உள்ளது, கல்வி மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படும். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு திருமண வரன்கள் கூடி வரும். இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். முயற்சியால் வெற்றி காண முடியும். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட எண்  :  ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்   : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்