தனுசு ராசி அன்பர்களே,

இன்று மிகவும் சிறப்புடன் செயல்பட்டு வெற்றி பெறும் சூழல் உள்ளது.  புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது பொறுமையாக செல்லுங்கள். வாழ்க்கையில் இன்று புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். கடுமையாக உழைப்பீர்கள். சிலர் உங்கள் பேச்சை அவமதிப்பார்கள். மனவருத்தம் பட வேண்டாம். அவ்வப்போது முன் கோபம் வெளிப்படும்.

இன்று குழப்பம் இல்லாமல் இருப்பதற்கு மனதை அமைதிப்படுத்துவது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணத்தையோ நகையையோ, கடனாக கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவு கூடும். தொழில் வியாபாரத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள். யாரையும் குறை சொல்ல வேண்டாம். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள்.

இன்று பெண்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. முன்கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். இன்று மாணவர்கள் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி காணலாம். புதிய பொறுப்புகள் வரும். சக நண்பர்களிடம் பேசும் போது கவனம் தேவை. இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிஷ்ட எண்   : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்  :  பச்சை மற்றும் பிரவுன் நிறம்