பெங்களூருவின் சுட்டெரிக்கும் கோடை வெயிலில், சாலையோரத்தில் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு பைக்கர் செய்த நெகிழ்ச்சியான காரியம் தற்போது இணையவாசிகளை உருக வைத்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த லக்ஷ்மன் பார்தீ என்ற இளைஞர், தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வெயிலில் தகித்துக் கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களைக் கண்டு வண்டியை நிறுத்தியுள்ளார். அவர்களிடம் சாதாரணமாகப் பேசத் தொடங்கி, திடீரென தனது பையிலிருந்து ஜில்லென்று ஐஸ்கிரீம் கோன்களை எடுத்து நீட்டியபோது, அந்தத் தொழிலாளர்களின் முகத்தில் மின்னிய ஆச்சரியமும் புன்னகையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.

எவ்வித ஆடம்பரமும் இன்றி, மிகவும் இயல்பாகப் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ, கருணைக்குக் காசு பணம் தேவையில்லை, நல்ல மனம் இருந்தால் போதும் என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதற்கு முக்கியக் காரணமே, அதில் இருந்த நேர்மையும் எளிமையும்தான். வழக்கமான வைரல் வீடியோக்கள் போலத் திட்டமிடப்பட்டதாகத் தெரியாமல், அந்தத் தொழிலாளர்களின் நிஜமான மகிழ்ச்சியைப் படம்பிடித்தது நெட்டிசன்களின் இதயத்தை வென்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by LAKSHMAN BHARTEE ♌️🇮🇳 (@leki_goswami01)

“>

கடுமையான வெயிலில் உடல் உழைப்பு செய்யும் எளிய மனிதர்கள் பெரும்பாலும் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் நிலையில், லக்ஷ்மனின் இந்தச் சிறு உதவி அவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. “ஒரு ஐஸ்கிரீம் ஒருவரின் நாளை இவ்வளவு அழகாக மாற்றுமா?” எனப் பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்த வீடியோ மனிதாபிமானத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்துள்ளது.