இந்த இயந்திரத்தனமான உலகில் மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை பறைசாற்றும் விதமாக பிரேசிலில் இருந்து ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள ஒரு பள்ளியில், பிறவியிலேயே கைகள் இன்றி பிறந்த ஒரு சிறுவனுக்கு, அவனது தோழி மிக அழகாக மதிய உணவை ஊட்டிவிடும் காட்சிகள் காண்போர் கண்களைக் கசியச் செய்துள்ளன. அந்த 5 வயது சிறுமி, தன் நண்பனின் தேவையறிந்து தானாக முன்வந்து உணவை ஊட்டுவதும், அதை அந்தச் சிறுவன் புன்னகையோடு ரசிப்பதும் ‘உண்மையான நட்பு’ என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

​இந்தக் காணொளி ‘எக்ஸ்’ (X) தளத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. “உடல் ஊனத்தை விட மனதின் அன்பே பெரியது” என்று நெட்டிசன்கள் பலரும் அந்தச் சிறுமியின் உயரிய குணத்தைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர். இந்த பிஞ்சு குழந்தைகளின் நட்பு, ஜாதி, மதம், மொழி என அனைத்தையும் கடந்து மனிதநேயமே முதன்மையானது என்பதை உலகிற்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.