மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், அரசு அலுவலக வேலைகளிலும், ஆன்மிக தரிசனங்களிலும் பங்கேற்கும் நோக்கில் தனது மனைவி சாதனா சவுகானை உடன் அழைத்துக்கொண்டு குஜராத் மாநிலத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு, சோம்நாத் ஜோதிர்லிங்கம் மற்றும் தேசிய கிர் பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டு, நிலக்கடலை ஆய்வு மையத்தில் விவசாயிகளை சந்திக்க ஜூனாகத் பகுதிக்கு வந்திருந்தார். ஜூனாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய அமைச்சர், காத்திருப்பு அறையில் தனது மனைவியை அமர வைத்துவிட்டு, பின்னர் ராஜ்கோட் பறக்கும் விமானத்தை பிடிக்க அவசரமாக சுற்றியுள்ள 22 கார்கள் கொண்ட பாதுகாப்பு கான்வாயுடன் நகர்ந்து சென்றார்.
விமான நிலையம் நோக்கி சென்ற போது, மனைவியை அங்கேயே விட்டுவந்துவிட்டது அவருக்குத் ஞாபகம் வந்தது. உடனே பதற்றமடைந்த அவர், மீண்டும் ஜூனாகத்துக்கே திரும்பி சென்று, மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சிரிப்பும், சமூக வலைதளங்களில் கலாட்டாவையும் ஏற்படுத்தியுள்ளது.
