தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பாக அரசு சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நிதித்துறை செயலாளர் சித்திக் ஐஏஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழகத்தின் தற்போதைய பொருளாதார எதார்த்த நிலவரம் குறித்து அதிரடியான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிதித்துறை செயலாளர் சித்திக் ஐஏஎஸ், அரசாங்கத்திற்கு 100 ரூபாய் வருவாய் வந்தால், அதற்குச் செலவோ 145 ரூபாய் ஆகிறது என்ற அதிர்ச்சிகரமான கணக்கை மிக வெளிப்படையாகப் போட்டு உடைத்துள்ளார்.
இதன் காரணமாக, அரசாங்கத்தின் கணக்கில் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் தற்பொழுது 45 ரூபாய் பற்றாக்குறை ஏற்படுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான 45 ரூபாய் நிதிப் பற்றாக்குறையை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்றால், அரசாங்கத்தின் வரவை (வருமானத்தை) உடனடியாக அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலை தற்பொழுது அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
தமிழக அரசின் இந்த எதார்த்தமான நிதிப் பற்றாக்குறை நிலவரம் குறித்த நிதித்துறை செயலாளரின் பேட்டி தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களில் காட்டுத்தீயாய் பரவி, “வரவு எட்டணா செலவு பத்தணா கதையா இருக்கே!, அடுத்து என்னாகப் போகுதோ!” என்று நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு செம ட்ரெண்டாகி வருகிறது.
