“என் வீட்டுப் பாப்பா ஆசையாப் போட்டுவிட்ட டி-ஷர்ட்டோடவே அந்த வாயில்லா ஜீவனை ரத்த வெள்ளத்துல சுட்டுக் கொன்னுட்டாங்களே சார், அது ரொம்ப சாதுவான நாய் சார்!”
என்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாய் ஜேம்சனின் உரிமையாளர் ஜெரெமியா கார்சியா கண்ணீர் மல்கக் கூறியுள்ள உருக்கமான வார்த்தைகள், தற்போது சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சாம்பியன்ஷிப் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சாதாரண இரைச்சல் புகாரை அடுத்து, 20-க்கும் மேற்பட்ட போலீஸாரும் ஹெலிகாப்டரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்குள்ள குடும்பத்தின் 2 வயது செல்ல நாய் ஜேம்சனைத் (கோல்டன் டூடுல் கலப்பினம்) துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
நாய் தங்களை நோக்கிப் பாய்ந்ததால் தான் தற்காப்பிற்காகச் சுட்டதாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டாலும், அது முற்றிலும் பொய் என்று அதன் உரிமையாளர் வன்மையாக மறுத்துள்ளார்.
போட்டி வெற்றிக்காகக் குடும்பத்தினர் ஆசையாக அணிவித்திருந்த நிக்ஸ் (Knicks) டி-ஷர்ட்டுடனேயே அந்த நாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பொறுப்பேற்கக் கோரி “ஜேம்சனின் நீதி” என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் குடும்பத்தினர் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் துறையின் படை விசாரணைப் பிரிவு தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், இந்தத் துயர மரணம் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் உருக வைத்துள்ளது.
FTP: LAPD killed her dog. He was wearing his Knicks jersey.
His name was Jameson. A golden doodle. One of the sweetest, most gentle breeds alive.
A neighbor called a noise complaint. That’s it.
20+ officers showed up. Then a helicopter. For a noise complaint in an apartment… pic.twitter.com/8xY1e1IuYh— Anonymous (@YourAnonNews) June 15, 2026
“>
