தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் அணிந்து கொண்டு பள்ளிக்கு வருவதில் எந்தவொரு சட்டப் பிரச்சனையும் இல்லை என்றும், அதற்குப் பள்ளிகளில் தடை விதிக்க முடியாது என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் மிகத் தெளிவாகவும் அதிரடியாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்துள்ளது

தற்பொழுது சோசியல் மீடியாவிலும் ஆன்மீக அன்பர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. பள்ளிகளில் மாணவர்களின் ஆன்மீக மற்றும் மதச்சார்பு அடையாளங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த பல்வேறு வதந்திகளுக்கும் விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்கள் தங்களது மத வழக்கங்களின்படி விபூதி, குங்குமம் வைப்பதில் எந்தவொரு தடையும் இல்லை என்பதைப் பள்ளிக் கல்வித்துறை சார்பாக ஆணித்தரமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கல்வி நிலையங்களில் அனைத்து மாணவர்களின் தனிப்பட்ட உரிமைகளும், மத நம்பிக்கைகளும் மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் முன்வைத்துள்ள இந்த எளிய, புரியக்கூடிய அதிரடி விளக்கம் தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.