தோசை என்றாலே நம் மனதில் நெய் தோசை, ரவா தோசை, வெங்காய தோசை, கோதுமை தோசை, மசால் தோசை போன்ற பல வகைகள் தோன்றும். ஆனால், நூடுல்ஸ் தோசை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, நூடுல்ஸ் தோசை செய்ய முடியும் என்பதை வியப்பூட்டும் வகையில் காட்டியுள்ளது. இப்படியும் ஒரு தோசையா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்திய இந்த காணொளி, இருபது மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இந்த காணொளியில், ஒரு நபர் கடாயில் நூடுல்ஸ், வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் நூடுல்ஸ் மசாலாவைப் போட்டு நன்கு வதக்குகிறார். பின்னர், இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு, ரவை மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கிறார். இந்த மாவைப் பயன்படுத்தி தோசைக்கல்லில் தோசையாக சுட்டு, நூடுல்ஸ் தோசை சாத்தியம் என்பதை அழகாக நிரூபித்துள்ளார். இந்த புதுமையான யோசனை பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி, “இப்படியும் ஒரு தோசையா?” என்று வியக்க வைத்துள்ளது.
