மும்பையின் டர்பே பகுதியில் உள்ள விடுதியில் அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் தங்கி இருந்தார். இவர் நேற்று காலை அறைக்கு வந்த விடுதியின் பெண் ஊழியர் ஒருவரிடம் தவறாக நடந்துள்ளார்.

பாலியல் செயலுக்கு வற்புறுத்தியதாக அந்த நபர் மீது பெண் ஊழியர் புகார் கொடுத்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.