இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து விபரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிப்பது அவசியம் என்பதால் அதனை இலவசமாக செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே ஆதார் கார்டில் அப்டேட் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் உடனே அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு செல்லுங்கள். டிசம்பர் 13ஆம் தேதி வரை uidai.gov.in மற்றும் மை ஆதார் செயலியில் மட்டுமே கட்டணம் இல்லாமல் ஆதார் தகவல்களை திருத்தம் செய்து கொள்ள முடியும். டிசம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு ஆதார் அட்டையில் அப்டேட் மற்றும் திருத்தங்கள் செய்ய ஐம்பது ரூபாய் அல்லது 25 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.