தமிழகத்தில் தவெக புதிய ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், போதைப்பொருள் புழக்கம், கஞ்சா நடமாட்டம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல்துறைக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இதன் அதிரடி எதிரொலியாக, சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நேற்று (மே 19) ஒரே நாள் இரவில் அதிரடியான ‘ஸ்பெஷல் ஆபரேஷன்’ (Special Operation) நடத்தப்பட்டது. மாநகரம் முழுவதும் விடிய விடிய நடத்தப்பட்ட இந்த அதிரடி வேட்டையில், போதைப்பொருள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 76 ரவுடிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு விவகாரத்திலும், பொதுமக்களின் பாதுகாப்பிலும் தவெக அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என்பதை உணர்த்தும் வகையில் கோட்டை வட்டாரத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ‘நள்ளிரவு ஆக்ஷன்’ (Action), ஒட்டுமொத்த குற்ற உலகையும் உலுக்கியுள்ளதோடு, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுத் வருகிறது.