தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகளை முன்வைத்துள்ளார்.
பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சசிகலா புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும், அதில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அந்தக் கட்சி தவெக-வுடன் கூட்டணி அமைக்கலாம் எனவும், குறிப்பாக தவெக-வும் காங்கிரஸும் கைகோர்த்தால் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ராகுல் காந்தியும் தவெக தலைவர் விஜய்யும் ஒரே மேடையில் நின்றால் அது திமுகவினருக்கு ‘மாரடைப்பை’ ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்ட அவர், தவெக தன்னிச்சையாக வெல்லும் பலம் கொண்டிருந்தாலும், சில கட்சிகள் தவெக-வுடன் இணையத் தவிப்புடன் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
