கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும் அரசியல் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழர் முன்னேற்றப்படை தலைவி வீரலட்சுமி, விழிப்புணர்வு கருத்துக்களைத் தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த போது, “கரூர் நிகழ்வுக்கு முழுமையான காரணம் விஜய் ரசிகர்களே” எனக் கூறி, அவர்களையே குற்றம்சாட்டினார்.

மேலும், இவ்வாறு தவறான செயலில் ஈடுபடும் ரசிகர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில், தமிழக மக்கள் அவர்களிடம் இருந்து விலகி நடக்க வேண்டும் என்றும், “விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்க கூடாது, வீட்டில் பெண் எடுக்க கூடாது, அவர்களை யாரும் காதலிக்க கூடாது” எனக் கூறியுள்ளார். இதற்கு சாட்சியாக, விஜயின் செயல்பாடுகளைப் போலவே அவரது ரசிகர்களும் கட்டுப்பாடின்றி செயல்படுகிறார்கள் என்றும், இச்சம்பவம் அதற்கான உண்மை உதாரணம் என்றும் சாடியுள்ளார். வீரலட்சுமியின் இந்தக் கருத்துகள் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் எழுப்பியுள்ளது.
