கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சென்றிருந்தார். இதையடுத்து, இருவருக்கும் இடையிலான பழைய அரசியல் மோதல் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த நாட்களில் கமல்ஹாசன், செந்தில் பாலாஜி மீது மணல் கொள்ளை குறித்த குற்றம்  சாட்டிய வீடியோ தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் கமல், “11 மணிக்கு வண்டியை கட்டிட்டு போ, அதிகாரி தடுத்தால் அதிகாரியை இல்லாம செய்து விடுவேன் என்கிறார்கள். இது வேலையை விட்டு நீக்குவது குறித்து சொல்கிறார்களா அல்லது கொ* செய்வதைக் குறிக்கிறார்களா? எப்படி பார்த்தாலும் நீ ஒரு குற்றவாளி, உன் பேச்சிலேயே உன் உண்மை வெளிப்படுகிறது,” என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த செந்தில் பாலாஜி, “கமல்ஹாசன் மாதிரி ஒரு அறவே காடை நான் பார்த்ததில்லை. என்ன சொல்றோம் என அவருக்கே தெரியவில்லை. அவர் கூறும் குற்றச்சாட்டை எந்த தொகுதியில் குற்றம் நடக்கிறது என சொல்கிறார்களோ, அந்த தொகுதியில் வந்து சொல்லச் சொல்லுங்கள். அவர் பின்னணியில் பாஜக, அதிமுக இருக்கிறது” எனக் கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார். இப்போது அந்த இரு வீடியோக்களும் மீண்டும் இணையத்தில் ட்ரெண்டாகி, அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.