தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு குறித்த செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “விஜய்யின் குணாதிசயங்களைச் சிதைக்கும் நோக்கில் சிலர் திட்டமிட்டு ‘பெர்சனல் அட்டாக்’ செய்கின்றனர்.
எப்போதோ நடந்து, எப்போதோ இருவருக்குள்ளும் சமரசமாகி கையெழுத்தான ஒரு விஷயத்தை, தேர்தல் நேரத்தில் இப்போது தேவையில்லாமல் கிளப்புகிறார்கள்” என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
விஜய் பெண்களுக்கு எதிரானவர் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாகவும், மற்றவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதில் அவர்கள் ‘பிஹெச்டி’ முடித்தவர்கள் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
இதற்கிடையே, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு, ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக விஜய் மற்றும் சங்கீதா இருவரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக அனுமதி கோரியுள்ள நிலையில், எஸ்.ஏ.சி-யின் இந்த விளக்கம் விஜய் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
