கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு, ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உணர்ச்சியுடன் செயல்பட்ட சூழலில், மனநல மருத்துவர் ஒருவர் வழங்கிய ஆலோசனை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் அவர், “விஜயை பதவியில் கொண்டு போய் உட்கார வைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இனி கட்சி விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்” எனத் தொடங்கி பேசுகிறார். மேலும், “அவர் மீண்டும் மக்கள் சந்திக்க கூட்டம் நடத்தினால், கரூரை போன்ற துயரச் சம்பவம் மீண்டும் நடக்காதபடி நாம் உறுதி அளிக்க வேண்டும். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.
அவர் தொடர்ந்து, “தேர்தல் வரப் போகிறது, பிரச்சாரம் நடக்க வேண்டுமானால் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். உங்கள் தனிப்பட்ட சந்தோஷத்திற்காக பிரச்சாரம் தடைப்படக் கூடாது. எந்த அரசியல்வாதி கூட்டம் நடத்தினாலும் — அது விஜய் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் — நெரிசல் ஏற்படும் இடங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டாம்” எனவும் அறிவுறுத்தியுள்ளார். இந்த நியாயமான ஆலோசனை இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும், “இது உண்மையான ரசிகர் நலனுக்கான விழிப்புணர்வு பேச்சு” என பாராட்ட, மற்றவர்கள் “இப்படிப் பட்ட விழிப்புணர்வை கட்சி அளவிலும் உருவாக்க வேண்டும்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
நம்முடைய பலமே நமக்கு பலவீனமாக மாறிவிட்டது.
நமக்கு விஜய் மீது இருக்கும் அன்பு வெளிப்படுத்த எத்தனையோ வழிகள் இருக்கிறது என்பதை புரிந்து இனி நாம் பக்குவத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
நாம் அரசியல்படுத்தப்படுவது மிகவும் முக்கியம். pic.twitter.com/n5g7oPQVXg
— Comrade❤️ (@Fighter42157714) October 6, 2025
