தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயமாகத் தளபதி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், அந்த விழாவைக் காண வந்த ஒரு நெகிழ்ச்சியான குடும்பம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் வீட்டில் நீண்ட காலம் பணியாற்றிய பெண் மற்றும் அவரது தாயார் இந்த வரலாற்றுத் தருணத்தைக் காண வந்துள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெரியவருக்கு, தனது சொந்தப் பணத்தில் அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்ததோடு, அவரைத் தனது தாயாகவே கருதி விஜய் கவனித்துக்கொண்ட உண்மையை அவர்கள் கண்ணீருடன் பகிர்ந்துள்ளனர்.
விஜய் அண்ணா வீட்டில் வேலை பார்த்த அம்மா கண்ணீர் மல்க 😢
என் புள்ள தான் என்னை காப்பாற்றினார்..
என் புள்ள நல்லாருக்கணும்..
நல்ல பெயர் வாங்கணும்..எங்களை Servant மாதிரி நடத்தினதே இல்லை..
ரொம்ப நல்ல மனசுள்ள புள்ள விஜய்..#முதல்வர்_விஜய்#தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/ExEyMI4wQ8
— விஜய் ரசிகை #TVK (@Itsme__visali) May 10, 2026
”எங்களை அவர் ஒருபோதும் வேலைக்காரர்களாகப் பார்த்ததில்லை; தனது உடன்பிறந்த தங்கையாகவும், தாயாகவும் தான் பார்த்தார்” என அந்தப் பெண் உருக்கமாகக் கூறினார். லியோ பட வெற்றி விழாவின் போது, அறுவை சிகிச்சை முடிந்த 40-வது நாளிலேயே தன்னை நேரில் அழைத்து விஜய் கௌரவித்ததை அந்தத் தாய் நினைவுகூர்ந்தார். “என் பிள்ளை முதலமைச்சராக வர வேண்டும் என நாள்தோறும் அழுது அழுது வேண்டிக் கொண்டேன்; இன்று நான் உயிரோடு இருப்பதற்கு என் பிள்ளை விஜய் தான் காரணம்” என அவர் கூறியது அங்கிருந்தவர்களைக் நெகிழச் செய்தது.
