விஜய்யின் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் உள்ள பிழை பேசுபொருளாக மாறியிருந்தது. இந்த நிலையில், “க்” எழுத்தை அக்கட்சி சேர்த்துள்ளது. கடந்த இரண்டாம் ஆம் தேதி நடிகர் விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டது. அதாவது தளபதி விஜய் மக்கள் இயக்கம் என செயல்பட்டு வந்த அமைப்பை, கட்சியாக மாற்றி விஜய் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பெயரில் ‘க்’ என்ற எழுத்து இல்லை என விமர்சனங்கள் எழுந்த  நிலையில், ‘க்’ எழுத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் சேரத்துள்ளார். தற்போது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என மாற்ற விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.