தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தடை செய்யப்பட்டுள்ளது. பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் செயற்கை நிறமூட்டி கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த வாரம் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல இடங்களில் நடத்திய சோதனையில் அடர் நிறமுடைய பஞ்சுமிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது

உணவு பாதுகாப்பு & தரங்கள் சட்டம் 2006 இன் படி பாதுகாப்பற்ற உணவு என தெரிய வந்ததால் பஞ்சு மிட்டாய்க்கு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டது. புற்றுநோய் உண்டாக்கும் Rhedaminbe B என்ற செயற்கை நிறமி இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பஞ்சு மிட்டாய் விற்பது சட்டப்படி குற்றம் என்பதால் கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சுமிட்டாய் தயாரித்தல், விற்பனை செய்தல், இறகுமதி செய்தல் என அனைத்தும் தண்டனைக்குரிய குற்றம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருமண விழாக்கள், கோவில் விழாக்கள் உள்ளிட்ட எந்த வித நிகழ்வுகளிலும் பஞ்சுமிட்டாய் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.