நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய அரசியலில் அதிரடியாக இறங்கியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தாலும் கட்சி தொடர்பான புதிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வந்தபடி உள்ளது. அதன்படி தற்போது கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி வருகின்ற மார்ச் எட்டாம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் மேலும் மகளிர் தினமான மார்ச் 8 மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.