நடிகர் வடிவேலு 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று இருந்த நிலையில் திமுகவுடன் அவர் நெருக்கம் காட்டி வருவதாகவும் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வடிவேலு, தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி இருந்த மாமன்னன் திரைப்படத்தில் முழு அரசியல்வாதியாக வடிவேலு நடித்து  நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.