தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஒரு அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே தவெக-வில் இணைய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இணைப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதாகவும், இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​மேலும், நடிகர் விஜய்யை முதல்வராக ஏற்றுக்கொள்பவர்களை மட்டுமே தங்கள் கூட்டணியில் சேர்ப்போம் என்பதில் தவெக உறுதியாக உள்ளது. இந்தச் சூழலில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தவெக கூட்டணியில் இணைவது உறுதி என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த மெகா கூட்டணி மாற்றங்கள் தமிழக அரசியலின் போக்கையே மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.