விஜய்யின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த பாஜக-வைச் சேர்ந்த குஷ்பூ, “மேடையில் கிடைக்கும் விசிலுக்காக ஆவேசமாகப் பேசுவதை விட்டுவிட்டு, நிதானமாகப் பேச வேண்டும்” என்று விஜய்க்கு அட்வைஸ் செய்துள்ளார். விஜய் அரசியலுக்குப் புதியவர் என்பதால் இப்படிப் பேசுகிறார், போகப்போக அவர் திருந்திவிடுவார் என்றும் கிண்டலாகக் கூறியுள்ளார்.

​அதிமுக-வைப் பற்றிப் பேசுகையில், அது அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி என்றும், அது யாரிடமும் சரணடைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் விஜய்க்குப் பதிலடி கொடுத்துள்ளார்.