2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல் குறித்து மத்திய இணை அமைச்சரும், இந்தியக் குடியரசு கட்சியின் (RPI-A) தலைவருமான ராம்தாஸ் அத்வாலே வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) பேச்சுவார்த்தை நடத்தி பாஜக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு விஜய்யின் ஆதரவைக் கோருவது குறித்து பாஜக தலைமை ஆலோசிக்கும் என்றும், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விஜய்யின் கட்சி ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தவெக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், அத்வாலேவின் இந்த “தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி” குறித்த சமிக்ஞை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.