தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அக்கட்சித் தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, எந்த ஒரு பாகுபாடுமின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், டிஜிபி-க்கு அதிரடியாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.

​தேர்தல் பிரச்சாரத்தின்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விஜய் தரப்பு புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.