தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். நேற்று பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், நாளை மறுநாள் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, உடனடியாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.

​இதற்காகத் திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி தவெக தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யின் பிரச்சாரங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுவதால், திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முறையான அனுமதி கோரி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இந்த அடுத்தடுத்த அதிரடிகள் திருச்சி அரசியல் களத்தை இப்போதே சூடாக்கியுள்ளன.