தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் தனது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்த நிலையில், விஜய் பிரச்சாரம் செய்த பகுதிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்று தவெக தரப்பில் சிடிஆர் நிர்மல் குமார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்குப் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

​இந்தப் புகாரைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவான விளக்கமளிக்க சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு தொடர்பான இந்த விவகாரம் தற்போது தேர்தல் களம் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.