தமிழக பாஜகவின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று மாலை 6 மணிக்கு சென்னை கமலாலயம் வருகிறார். பாஜக தேர்தல் பொறுப்பாளரான அவர், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சியின் மையக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, வேட்பாளர் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்துள்ள நிலையில், பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, முக்கிய நிர்வாகிகள் மற்றும் புதுமுகங்களுக்கு இந்த முறை அதிக வாய்ப்புகள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. பியூஷ் கோயல் வருகையால் தமிழக பாஜக வட்டாரத்தில் தேர்தல் களம் தற்போது கூடுதல் வேகம் எடுத்துள்ளது.