மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை எம்.பி.யான கமல்ஹாசன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து எழும் விமர்சனங்கள் குறித்து தனது மனநிலையை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“நடிகர்கள் அரசியலுக்கு வருவதை முன்னிட்டு மட்டும் விமர்சனங்கள் எழுவதில்லை. ஒருவர் நடிக்க வந்தாலுமே விமர்சனங்கள் எழும். எனவே, விமர்சனங்கள் என்பது பொதுவானது. விஜய்க்கு கூடுகிற கூட்டம், ஓட்டாக மாறும் என்பதற்கான உத்தரவாதம் யாருக்கும் இல்லை. இது எதுவுமே ஒரேபோல அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும். அது விஜய்க்கும் பொருந்தும், எனக்கும் பொருந்தும்.”
மேலும் அவர் கூறியதாவது:
“நல்ல பாதையில் நடக்கவேண்டும், தைரியமாக முன்னேற வேண்டும். மக்களுக்காக செயல்படவேண்டும் என்பதுதான் நான் எல்லா அரசியல்வாதிகளிடமும் வைக்கும் வேண்டுகோள். நான் ஒரு குடிமகனாக இருந்தாலும் கூட, இதே வேண்டுகோளைச் சொல்லி இருப்பேன்,” என்றார் கமல்ஹாசன்.
