தனது மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ள த.வெ.க. தலைவர் விஜய் குறித்து, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், மக்களை சந்திக்கலாம். ஆனால் தி.மு.க.விற்கும், த.வெ.க.விற்கும் போட்டியென விஜய் பேசுவது அவருக்குத் தெரிந்ததா தெரியாமலா?” என கேட்டுள்ள அவர், “விஜய் பரீட்சை எழுதாமல் பாஸ் ஆகிவிடுவேன் என நம்புகிறார்.
அதற்காக பரீட்சை எழுதவேண்டும். மதிப்பெண் வந்த பிறகுதான் அவர் பாஸ் ஆனாரா இல்லையா என்பதை விவாதிக்கலாம்,” என்றார். மேலும், தற்போது தான் படிக்க தொடங்கியுள்ள விஜய், பரீட்சை எழுதும் மாணவர் போல உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து அவர் கூறியது: “மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் பதிலளிப்பது இயல்புதான். ஆனால் மாணவர் தேர்ச்சி அடந்தாரா என்பது மதிப்பெண் வந்த பிறகே தெரியும். விஜயும் அரசியல் மாணவராகவே உள்ளார்.
அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஆளும், எதிர்க்கட்சி, தேசிய, மாநிலக்கட்சிகள் தமது பதில்களை அளிக்கிறார்கள். ஆனால், தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய அனுபவமும், வலிமையும், கிளைக்கழகங்களும், தொண்டர்களும், மக்கள் ஆதரவும் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க.தான். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் தி.மு.க.வை வெல்லக்கூடிய நிலைமையில் உள்ளோம்” என்று உறுதியாகக் கூறினார்.
