தமிழக அரசியலில் தீவிரமாக நடைபெற்று வரும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மத்தியில், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

அந்தக் கட்சியின் உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் இன்று (செப்.21)  தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கியக் கூட்டத்தில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கூட்டணியுடன் இருந்தாலும், பாமகக்கு குறைந்தது 30 தொகுதிகள் வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது, பாமக இரு பிரிவுகளும் தனித்தனியாக தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் திமுகவுடன் இணையும் வாய்ப்புகள் குறித்து சில தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

மறுபக்கம், அதிமுகவுடன் இணைந்து பணியாற்றும் நோக்கிலும் இரகசிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 30 தொகுதிகள் என்பதே பாமகவின் தவிர்க்க முடியாத கோரிக்கையாக இருப்பதால், எந்த அணியுடன் கூட்டணி என்ற முடிவை ராமதாஸ் தனிப்பட்ட முறையில் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.