தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் ‘தொங்கு சட்டமன்ற’ நிலை நீடித்து வரும் வேளையில், தவெக தலைவர் விஜய் புதிய ஆட்சி அமைக்க அதிமுக ஒருபோதும் ஆதரவு தராது என அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் தொகுதியில் மீண்டும் வென்றுள்ள அவர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்த அதிரடி அரசியல் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டு, காங்கிரஸ் போன்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்டு காய் நகர்த்தி வரும் சூழலில், அதிமுகவின் இந்த மறுப்பு, கோட்டை அதிகாரப் போட்டியில் புதிய முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு தராது-முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் #TVK #Vijay #ADMK #OSManian #News18TamilNadu #TamilNews pic.twitter.com/tFlXYp6Y0U
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 5, 2026
“>
திராவிட இயக்கக் கொள்கைகளுக்கும், கொள்கையற்ற புதிய அரசியல் அலைகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், தவெக ஆட்சியமைக்க அதிமுகவின் கதவுகள் எப்போதும் மூடப்பட்டே இருக்கும் என ஓ.எஸ்.மணியன் ஓப்பனாகப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
