தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விரைவில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலியாகும் அந்தத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்களைத் தவெக சார்பில் களமிறக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
முன்னதாக, கட்சியில் இணைவது குறித்த கேள்விக்கு “கற்பனையான செய்திகளுக்குப் பதிலளிக்க முடியாது” என்று சகாயம் தெரிவித்திருந்தாலும், தற்போது இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
