பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேற்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகத்தினர் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி சடங்கு முடிந்த உடன் அவரது உடலை வைக்கும் பெட்டியின் புகைப்படம் வெளியாகி உள்ளது. சந்தனத்தால் செய்யப்பட்ட இந்த பேழையின் இரண்டு பக்கத்திலும் விஜயகாந்த் அவர்களது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.