செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  இந்த மழை பெய்த அடுத்த நாள் காலையிலிருந்து எங்க கட்சியினுடைய நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,  நீங்க பத்திரமா இருக்கீங்களா…  நீங்க என்ன பண்ணுறீங்க ? என்ன நடக்குது ? என கேட்டேன்… எல்லாமே எங்ககிட்ட சொன்னது….   ஐயா நாங்க நல்லா இருக்கிறோம்…  நாங்க வெளியே போய் மக்களுக்கு உதவி பண்ணிட்டு இருக்கின்றோம்… ரொம்ப மோசமா  இருக்கு அப்படன்னு தான்  எங்க கட்சி மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் எல்லாமே சொன்னாங்க…  சில பேரு என்னால தொடர்பு கொள்ள முடியல…

ரெண்டு நாளா தொடர்பு கொள்ள முடியல…மின்சாரம் இல்லை… அதனால தடைகள் இருக்கு… இதற்கு  பொதுவாக நான் சொல்லிட்டு இருக்கேன்.. mitigation என  இருக்கு.  வரலாற்றில் 150 ஆண்டுகளில் இதுவரைக்கும் இவ்வளவு பெரிய மழை  பார்த்தது கிடையாதுன்னா….  அடுத்த ஆண்டு இதுதான் நம்ம சொல்லப்போறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இதேதான் நாம்  சொல்லப்போறோம்.

ஆயிரம் ஆண்டுகள் பார்க்காத மழையை  அடுத்த இரண்டு ஆண்டுகளில் பார்க்கப் போகிறோம்.  ஏன் என்றால் ? இந்த காலநிலை மாற்றத்தால் தாக்கம் அடுத்தடுத்து மிகப்பெரிய அளவில்  இருக்கும்.  2015 இல் சென்னையில் பெரும் வெள்ளம் வந்தது. அப்போ நான் ஒரு ஆவணம் தயாரித்தேன்.  நான் விரும்பும் சென்னைனு ஒரு ஆவணம் தயாரித்து அதில் சொன்னேன். அடுத்து 10 ஆண்டுகளில் இதைவிட பெரிய வெள்ளம் வரும் என அன்னைக்கே சொன்னேன். ஆனால் 8 ஆண்டுகளில் வந்திருச்சு….  இன்னைக்கு சொல்றேன்….  சென்னையில் அடுத்த பெரும் வெள்ளம் ஐந்து ஆண்டு,  6 ஆண்டுகளில் வரும்னு சொல்றேன்.. நிச்சயமாக வரும். அதற்கு தயார் நிலையில்  இருக்கணும் என தெரிவித்தார்.