தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராகவும் அதன் பிறகு அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர் தான் விஜயகாந்த். இவர் சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் மகன்கள் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். என் நிலையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நேற்று அளித்த பேட்டியில்  விஜயகாந்தின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

அதாவது, பழையபடி நடப்பதற்கும் பேசுவதற்கும் பல முயற்சிகளை அப்பா எடுத்து வருகிறார். நாங்களும் அவர் மீண்டும் மீண்டு வருவார் என நம்புகிறோம் எனக் கூறியுள்ளார். தற்போது இருக்கும் உடல் நிலையின் படி அவர் 100 வயது வரை வாழ்வார் என நம்புகிறோம் என விஜய பிரபாகரன் அழைத்த இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.