சென்னையில் டிசம்பர் 6-ம் தேதி நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொள்ளும் நிலையில் அவர் அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட அதனை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கரின் பேரன் ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொள்வதாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது‌. நிகழ்ச்சியில் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட விஜய் பெற்றுக் கொள்வார் என்ற தகவல் வெளிவந்த நிலையில் விஜயுடன் திருமாவளவன் கூட்டணி வைக்கப் போவதாக தகவல்கள் பரவியதால் தற்போது திருமாவளவன் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதவ் அர்ஜுனா கலந்து கொள்கிறார். இந்நிலையில் திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாதது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அந்த வகையில் சவுக்கு சங்கர் பலம் தெரியாமல் திருமாவளவன் பலவீனம் ஆவதாகவும் விஜய்யுடன் அந்த நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டு பேச வேண்டும் எனவும் நேரமிருந்தால் இருவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்கலாம் எனவும் விஜய் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார்.

கூட்டணியில் தொடர்ந்தாலும் விஜயுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உதயநிதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல உதயநிதியை தேடி போக வேண்டாம் அவரே வாழ்த்து பெற தேடி வருவார். திமுக கூட்டணியில் நீங்கதான் கெத்து என்பது தெரியவரும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் மற்றொரு பயனர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எல்லோருக்கும் மன தலைவராக திகழும் திருமாவளவன் எதற்காக அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவை புறக்கணித்தார்.

ஒரு வருடத்திற்கு முன்பு திட்டமிட்ட ஒரு விழாவை இப்போ விஜய் அவர்கள் வந்ததால் புறக்கணிக்க என்ன காரணம். தமிழக வெற்றி கழகத்தின் எதிரிகள் திமுக மற்றும் பிஜேபி மட்டும் தான். அப்படி இருக்கும்போது விசிக ஏன் விஜயை அவர்களை புறக்கணிக்க வேண்டும். திமுகவை மகிழ்ச்சியடைய செய்வதற்காக திருமாவளவன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவை புறக்கணிப்பாரா .? மேலும் இதில் இருந்த நன்றாக தெரிகிறது அம்பேத்கரை விட திமுக தான் திருமாவளவனக்கு முக்கியம் என்பது என்று பதிவிட்டுள்ளார்.