தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியைச் சுவாரஸ்யமாக்கும் விதமாக, சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி (PR) தனது சபதத்தை நிறைவேற்றி மொட்டை அடித்துக் கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக, “விஜய்யின் த.வெ.க 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் நான் மொட்டை அடித்துக் கொள்வேன்” என்று அவர் சவால் விட்டிருந்தார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் த.வெ.க 100 தொகுதிகளைத் தாண்டி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
A short message to Annan @TVKVijayHQ and virtual warriors ! pic.twitter.com/O6vAV8H3Wg
— Prashanth Rangaswamy (@itisprashanth) May 4, 2026
இதனைத் தொடர்ந்து, தான் சொன்னபடியே மொட்டை அடித்துக் கொண்ட பிரசாந்த் ரங்கசாமி, அது தொடர்பான ஒரு காணொளியையும் வெளியிட்டுள்ளார். அதில், “வாழ்த்துக்கள் விஜய்ணா… நீங்கள் நல்லபடியாக ஆட்சி அமைப்பீர்கள்” என்று விஜய்க்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 30 இடங்கள் என்ற இலக்கையே மிகப்பெரிய விஷயமாகப் பார்த்த நிலையில், த.வெ.க-வின் இந்த 100+ இடங்கள் முன்னிலை ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும், பிரசாந்த் ரங்கசாமி போன்ற விமர்சகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
