தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் அனல் பறந்து வரும் நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்தத் தேர்தல் முடிவுகள் தனக்கு “இரட்டைப்படை மக்கா” (Double Dhamaka) சந்தோஷத்தை அளித்துள்ளதாக அவர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். அதில் முதலாவது மகிழ்ச்சியாக, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்ற தனது கட்சியின் (லட்சிய ஜனநாயக கட்சி) தலைவர் ஜோஸ் சார்லஸ் அவர்களின் வெற்றியை அவர் குறிப்பிட்டுள்ளார்.
"யாரையும் குறைவாக நினைக்க கூடாது"…
நடிகர் தாடி பாலாஜியின் Reaction#thadibalaji #tvkvijay #electionresult #thanthitv pic.twitter.com/ShCt5VyviU— Thanthi TV (@ThanthiTV) May 4, 2026
இரண்டாவது மகிழ்ச்சியாக, தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை விதைத்து, தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் வெற்றியைப் பகிர்ந்துள்ளார். “எங்கள் தலைவர் ஜோஸ் சார்லஸ் அவர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என அந்த வீடியோவில் பாலாஜி பேசியுள்ளார். த.வெ.க மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி ஆகிய இரண்டு புதிய கட்சிகளின் வரவும் வெற்றிகளும் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
