சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன. சமீபத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு நபர் சாலையோரம் அமர்ந்து வாழைப்பழம் விற்றுக் கொண்டிருக்கும் ஒருவரிடம் சென்று, மிகவும் சீரியஸான முகத்துடன் “வாழைப்பழம் எங்கே கிடைக்கும்?” என்று கேட்கிறார்.
இதனால் அவர் முன்னாலேயே குவியல் குவியலாகப் பழங்கள் இருப்பதை கவனித்தும், கிண்டலுக்காக கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு அந்த வியாபாரி கொடுத்த பதில்தான் இப்போது இணையவாசிகளைக் கவர்ந்துள்ளது. அந்த வியாபாரி சற்றும் யோசிக்காமல், ஒரு நக்கல் கலந்த முகபாவனையுடன் அந்த நபருக்கு கொடுத்த பதிலடி அங்கிருந்தவர்களையும், வீடியோவைப் பார்ப்பவர்களையும் அதிர வைத்துள்ளது.
View this post on Instagram
“>
மேலும் “கண்ணுக்கு முன்னாலயே வச்சிருக்கேன், இதைப் பார்த்துட்டு இப்படி ஒரு கேள்வியா?” என்பது போன்ற அந்த வியாபாரியின் எதார்த்தமான ரியாக்ஷன் மற்றும் நையாண்டிப் பேச்சு, கேள்வி கேட்டவரை ஒரு நிமிடம் நிலைகுலையச் செய்துவிட்டது. நெட்டிசன்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.
