சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், நள்ளிரவில் போர்வையை போர்த்திக்கொண்டு சிறுவன் ஒருவன் தனது நாயுடன் ரகசியமாக மொபைல் பார்த்துக் கொண்டிருக்கிறான். திடீரென்று அறைக்குள் நுழைந்த தாயின் காலடிச் சத்தத்தைக் கேட்டவுடன், இருவரும் நொடிப் பொழுதில் செய்த காரியம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அடுத்த வினாடியே இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல மிக கச்சிதமாக நடித்து தப்பித்தனர். குறிப்பாக, அந்த நாய் கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போல கொடுத்த பாவனைகள் உண்மையிலேயே ஆஸ்கர் விருதுக்கு தகுதியானது என்று இணையதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
“>
இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. “பிள்ளையை விட அந்த நாய் தான் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறது” என்றும், “இவர்கள் இருவரும் ஒரு சிறந்த டீம்” என்றும் பலரும் நகைச்சுவையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் செல்லப்பிராணிகள் மனிதர்களின் உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் எவ்வளவு விரைவாகப் புரிந்துகொள்கின்றன என்பதற்கு இந்தத் தருணம் ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது. இந்த க்யூட்டான வீடியோ பலரது மனங்களையும் வென்று வருகிறது.
