உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அண்மையில் whatsapp வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதி கொண்டுவரப்பட்டது . இதனைத் தொடர்ந்து தற்போது பாஸ்வேர்ட் மெசேஜ்களில் எடிட் செய்யும் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இனி வாட்ஸ் அப்பில் இமேஜ் மற்றும் வீடியோக்களோடு சேர்த்து அனுப்பப்படும் கேப்ஷன்களை மறுமுறை ஷேர் செய்யும் போது அதனை தங்கள் வசதிக்கு ஏற்ப எடிட் செய்து கொள்ளலாம். இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும் விரைவில் மற்ற தளங்களுக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.