இப்போது பலர் ஏமாற்றப்படும் புதுவகை ஊழலில் மோசடி செய்பவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் செயல்முறையை பயன்படுத்திக்கொண்டு, டேக்ஸ் டைம் ஸ்மிஷிங் பிரச்சாரங்கள் வாயிலாக மக்களை குறிவைக்கின்றனர். இந்த மோசடிக்காரர்கள் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். இச்செய்திகள் பிரபல இந்திய வங்கிகளிலிருந்து வருவது போன்று அனுப்பப்படுகிறது.

பயனர்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுவதே இதன் நோக்கம் ஆகும். மோசடி செய்வோர் பெறுநரின் வங்கிக்கணக்கு பிளாக் செய்யப்படும் என போலி குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர் என Sophos அறிக்கையில் கூறப்பட்டு உ ள்ளது. அதோடு தங்கள் கணக்குகளில் பான் மற்றும் ஆதார் அட்டை தகவலை புதுப்பிக்குமாறு அவர்களிடம் கோரப்படுகிறது. இந்த டெக்ஸ்ட் மெசேஜ்களில் ஒரு ஆண்ட்ராய்ட் பேக்கேஜ் பைல் (APK) கோப்பை பதிவிறக்குவதற்குரிய இணைப்பும் இருக்கும்.

இதில் APK கோப்புடன் இணைக்கப்பட்ட ஒரு செயலி நிறுவப்பட்டால், ஆப்ஸ் உண்மையான வங்கி பயன்பாடாக தெரிகிறது. இதனால் பயனர்கள் ஏமாற்றப்பட்டு அவர்கள் போலியான செயலியில் தங்களது வங்கித் தகவலை உள்ளிடும் வகையில் ஏமாற்றப்படுவார்கள். உங்களது வங்கி குறித்த தகவல் (அ) நிதித்தகவல்களை கேட்கும் செய்திகளை நீங்கள் பெற்றால் கவனமாக இருங்கள். வங்கிகள் செய்திகள், செய்தியிடல் செயலிகள் (அ) சமூக ஊடகங்கள் வாயிலாக உங்களை ஒருபோதும் தொடர்பு கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.