உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பயனர்கள் ஃபார்வேர்ட் செய்யப்பட்ட மீடியாவில் விளக்கத்தை சேர்க்கலாம். அதாவது அனுப்பப்படும் வீடியோவில் பயனர்கள் தேவையான கூடுதல் விவரங்களை சேர்க்க முடியும். இந்த வசதி வீடியோ மட்டுமல்லாமல் படங்கள், GIF மற்றும் ஆவணங்களுக்கு பொருந்தும்.

இந்த அப்டேட் வந்தது முதல் புதிய வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் வந்துள்ளதாக சில பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இந்தியாவில் சில பயனர்களுக்கு WHATSAPP செயல் இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 43 சதவீதம் பயனர்கள் பயன்பாட்டை பயன்படுத்தும் போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய பிரச்சனை குறித்து வாட்ஸ் அப் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை..இந்த புதிய வீடியோ செய்தி அம்சத்தை சோதிப்பதால் இந்த பிரச்சனை ஏற்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.