உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் பொதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் சமீபத்தில் ஒரு புதிய கணக்கு சரிபார்ப்பு அம்சத்தை வெளியிட்டது. இது பயனர்களின் மொபைல் சாதனத்தில் செயலில் இருக்கும் போது வைரஸ்கள் அவர்களின் கணக்குகளை பாதிக்காமல் தடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் மொபைலில் வரும் வைரஸ் தனிநபர்களின் பாதுகாப்பு மற்றும் தனி உரிமைக்கு மிகவும் குறிப்பிடத்தக்க ஆபத்துகளில் ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இது உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் மொபைல் சாதனத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாக்குபவர்கள் பாதிக்கப்பட்டவராக காட்டிக்கொண்டு மற்ற தொடர்புகளுக்கு ஸ்பேம் மற்றும் தவறான செய்திகளை அனுப்புவதற்காக பாதிக்கப்பட்ட கணக்குகளை எடுத்துக் கொள்வதையும் வாட்ஸ்அப் அங்கீகாரம் சான்றுகளை திருடுவதையும் தடுப்பதற்கு இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.