உலகம் முழுவதும் பல கோடி மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் புதிய கணக்கு சரிபார்ப்பு அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய அம்சம் மூலம் பயனர்களின் மொபைல் போன் செயலியில் இருக்கும் வைரஸ்கள் அவற்றின் கணக்குகளை பாதிக்காமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

செல்போன்களில் வரும் வைரஸ்கள் தனிநபர்களின் பாதுகாப்பு மற்றும் தனி உரிமைக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். ஏனெனில் இது உங்களுடைய அனுமதி இன்றி உங்கள் மொபைல் போனில் இருக்கும் செயலிகளை அணுகலாம். இதன் காரணமாக தாக்குபவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக காட்டிக்கொண்டு மற்ற தொடர்புகளுக்கு ஸ்பேம் மற்றும் தவறான செய்திகளை அனுப்புவதற்காக, பாதிக்கப்பட்ட கணக்குகளை எடுத்துக் கொள்வதையும் திருடுவதையும் தடுப்பதற்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.