இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புது விதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கிய வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் என்பது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது வாட்ஸ் அப் சாட் குறித்து இந்திய அரசே விசாரணை நடத்தி வருவதாக வெளியான செய்தி போலியானது என PIB உண்மை சோதனை முடிவு செய்துள்ளது. வாட்ஸ் அப் சாட்களை கண்காணிக்கவும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ஆனால் இது முற்றிலும் போலியான செய்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய வழிகாட்டுதல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.