இந்தியாவில் கலந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இதனைத் தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில், பழைய ஓய்வூதியம் அமல்படுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டால், இது மற்ற துறை அரசு ஊழியர்களுக்கும் எளிதில் கிடைத்து விடும்.