ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் இருந்து  மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீர ஒருவர் தான் வைத்திருந்த  துப்பாக்கிக் கொண்டு சக வீரர் மற்றும் பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். ஆர்பிஎப் வீரர் மேற்கொண்ட இந்த திடீர் தாக்குதலை பார்த்து  அதிர்ச்சி அடைந்த பயணிகள் பயந்து ஓடினர்.

ஆனாலும் ஒரு ஆர்பிஎஃப் வீரர் 3 பயணிகள் என மொத்தம் நான்கு பேர் இந்த துப்பாக்கி சுட்டில் பரிதாபமாக பலியாகினர். அதன் பிறகு டஹிசர் ரயில்நிலையம்  வந்ததும் துப்பாக்கி சூடு நடத்தியார் கீழே  குதித்து தப்பிச் சென்றார். இது குறித்த தகவல் அறிந்த  பாதுகாப்பு படையினர் தப்பி ஓடிய வீரரை கைது செய்ததோடு துப்பாக்கி சூடு நடத்தியதற்கான  காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.